Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: Nagaraj Sun, 21 Aug 2022 9:34:35 PM

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: மிதமான மழைக்கு வாய்ப்பு... அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.08.2022: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

kumari kadal,gulf of mannar,temperature,notification,rain ,குமரிக்கடல், மன்னார் வளைகுடா, வெப்ப நிலை, அறிவிப்பு, மழை

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :