Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று மற்றும் மார்ச் 4ம் தேதியும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

இன்று மற்றும் மார்ச் 4ம் தேதியும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 01 Mar 2023 2:10:22 PM

இன்று மற்றும் மார்ச் 4ம் தேதியும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, கடந்த டிசம்பர் முதல் பனிக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் வட ம்மாற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து கொண்டு வருகிறது.

அந்தவகையில், கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதன்படி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ,கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

rain,monsoon,tamil nadu , மழை,பருவமழை ,தமிழ்நாடு

மேலும், கிழக்கு திசை காற்றின் வேறுபாட்டால் இன்றும், மார்ச் 4ம் தேதியும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மார்ச் 2,3,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நீடிக்கும்.

அதை தொடர்ந்த்து சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்சம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஸியஸாக இருக்கும். மார்ச்சு 4 மற்றும் 5ல் குமாரி கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|