Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு ... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு ... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Mon, 23 Jan 2023 6:15:34 PM

இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு   ...  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக நாளை தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் இந்த குறிப்பிட்ட பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

chennai meteorological centre,rain ,சென்னை வானிலை ஆய்வு மையம்,மழை

அதனைத்தொடர்ந்து சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ எனவும் தெரிவித்துள்ளது.


Tags :