Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 04 Aug 2022 2:54:52 PM

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்த்குறிப்பில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.

மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

tamil nadu,puduvai and karaikal,moderate rain ,தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால், மிதமான மழை

இதனை தொடர்ந்து நாளை (05.08.2022 ) : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

இதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.என்று தகவல் தெரிவித்துள்ளது.

Tags :