Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி, தென்காசி உட்பட 10 மாவட்டத்தில் மிதமான மழை பெய்யலாம்

தேனி, தென்காசி உட்பட 10 மாவட்டத்தில் மிதமான மழை பெய்யலாம்

By: Nagaraj Sat, 23 May 2020 11:16:07 AM

தேனி, தென்காசி உட்பட  10 மாவட்டத்தில் மிதமான மழை பெய்யலாம்

தேனி, தென்காசி உட்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாம். கோடை வெப்பத்திற்கு இந்த சிலுசிலுப்பான மழை மக்களுக்கு குளிர்ச்சியை தரும்.

மேற்கு வங்கத்தை உலுக்கி விட்டு 'அம்பான்' புயல், கரை கடந்த நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் தட்பவெப்ப நிலை, மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.

thoothukudi,krishnagiri,weather,theni,thenkasi,dindigul ,தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, வானிலை, தேனி, தென்காசி, திண்டுக்கல்

புயல் உருவாகும் போது, தென் மாநிலங்களில் ஏற்பட்ட, வறண்ட வானிலை காரணமாக, பல இடங்களில், ஐந்து நாட்களாக வெப்ப காற்று வீசுகிறது.

ஏற்கனவே பொது முடக்கத்தால் வீடுகளில் உள்ள மக்கள் தற்போதைய தளர்வுகளால் ஒரு சில பணிகளுக்கு சென்று வருகின்றனர். கோடை வெயில் அதிலும் கத்திரி வெயிலால் அதிக அவதியடைந்து வருகின்றனர். தமிழக வட மாவட்டங்களுக்கு, இன்றும், வறண்ட வானிலை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

thoothukudi,krishnagiri,weather,theni,thenkasi,dindigul ,தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, வானிலை, தேனி, தென்காசி, திண்டுக்கல்

இது குறித்து, வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது;

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, பெரம்பலுார், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், இன்று வெப்ப அலையுடன் கூடிய காற்று வீசும்.

தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் துாத்துக்குடி ஆகிய, 10 மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும். சென்னையில், அதிகபட்சம், 42; குறைந்தபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|