Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தினால் தமிழக 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தினால் தமிழக 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 15 June 2022 4:28:26 PM

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தினால் தமிழக 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழைக்கு  வாய்ப்பு

தமிழகம்: தமிழக பகுதியின் மேல்‌ நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று ஜூன் 15 தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், திண்டுக்கல்‌, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் , கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர்‌, ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும் பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், அந்நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 37-38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

center for temperature,rain,and meteorology ,வெப்பநிலை ,மழை,வானிலை ஆய்வு மையம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

15.06.2022: இலட்சத்‌தீவு பகுதி, கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

16.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மன்னர்‌ வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

17.06.2022: வடக்கு கேரளா மற்றும் தெற்கு கர்நாடக கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.
18.06.2022: கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

19.06.2022: கர்நாடக கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.


Tags :
|