Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மோடி, யோகி அரசு நகரங்களை மட்டுமல்ல..கிராமங்களையும் மேம்படுத்தும்- பெருமிதமாக பேசிய பிரதமர்..

மோடி, யோகி அரசு நகரங்களை மட்டுமல்ல..கிராமங்களையும் மேம்படுத்தும்- பெருமிதமாக பேசிய பிரதமர்..

By: Monisha Sat, 16 July 2022 6:31:21 PM

மோடி, யோகி அரசு நகரங்களை மட்டுமல்ல..கிராமங்களையும் மேம்படுத்தும்- பெருமிதமாக பேசிய பிரதமர்..

லக்னோ: ‛‛இந்த மோடியும், யோகியும் நகரங்களை மட்டுமல்ல கிராமங்களுக்கும் வளர்ச்சி பணிகளை கொண்டு சென்று மேம்படுத்துவார்கள்'' என பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக கூறினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 2020ல் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் என்பது சித்ரகூட் மாவட்டத்தில் இருந்து எட்டாவா மாவட்டத்தை இணைக்கும்.

ரூ.14,850 கோடி செலவில் 296 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக இந்த சாலை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது வெறும் 28 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சாலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஜாலன் நகரில் நடந்த விழாவில் ரிமோட் பட்டனை அழுத்தி பிரதமர் நரேந்திர மோடி புதிய சாலையை திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

modi,yogi,government,villages ,மோடி, யோகி ,அரசு,வளர்ச்சி ,

ஒரு மாநிலத்தில் 2 முக்கிய விஷயங்கள் சரிசெய்யப்பட வேண்டும். ஒன்று சட்டம் ஒழுங்கு, இன்னொரு இணைப்பு சாலைகள்.இவை இரண்டுகள் சரிசெய்யப்பட்டு விட்டால் முரண்பாடுகளுக்கு எதிராக மாநிலம் போராட முடியும். நாங்கள் இந்த இரண்டையும் மேம்படுத்துகிறோம்.

சட்டம்-ஒழுங்கு மேம்பட்டுள்ளது. நகரங்கள் இணைப்பும் நடந்துள்ளது. இந்த விரைவு சாலையானது இந்த பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சியை அபரிமிதமாக்கும். ஏனென்றால் இது மோடி, யோகியின் அரசு. நாங்கள் நகரங்களுக்கு மட்டுமின்றி கிராமங்களுக்கும் வளர்ச்சியை எடுத்து செல்வோம்'' என்றார்.

Tags :
|
|