Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு மோடி வாழ்த்து

5-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு மோடி வாழ்த்து

By: Karunakaran Thu, 11 June 2020 09:11:35 AM

5-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு மோடி வாழ்த்து

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவுக்கு பின் இந்தியா - இஸ்ரேல் நல்லுறவு குறித்து தனது நண்பர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்..

benjamin netanyahu,modi,prime minister,israel ,பெஞ்சமின் நேதன்யாகு,மோடி,பிரதமர்,இஸ்ரேல்

மேலும் இஸ்ரேல் பிரதமராக 5-வது முறை பெஞ்சமின் நேதன்யா பதவியேற்றுள்ளார். இதனால் பிரதமர் மோடி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். வரும் நாட்களில் இரு நாடுகளின் நல்லுறவு மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கம்போடியா பிரதமருடன் கலந்துரையாடியது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கம்போடியா பிரதமர் ஹன் சென்னுடன் பேசியதாகவும்,இந்தியாவும், கம்போடியாவும் கலாச்சாரம் மற்றும் வரலாற்று தொடர்புகளைக் கொண்டுள்ளன. அந்நாட்டுடன் உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|