Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் - ஜே.பி.நட்டா

மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் - ஜே.பி.நட்டா

By: Karunakaran Thu, 17 Sept 2020 12:10:12 PM

மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் - ஜே.பி.நட்டா

கடந்த 14-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி அளித்தபோது, பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மோடி அரசால் தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வரப்பட்டவை என்று கூறினார்.

modi government,agriculture bills,agricultural production,jp natta ,மோடி அரசு, வேளாண் மசோத, விவசாய உற்பத்தி, ஜே.பி.நட்டா

இந்த மசோதாக்கள் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க உதவும் என ஜே.பி.நட்டா தெரிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி கேட்டதற்கு, இது தொடர்ந்து நீடிக்கும். அரசியல் காரணங்களுக்காகவே இந்த மசோதாக்களை காங்கிரஸ் எதிர்ப்பதாகவும் ஜே.பி.நட்டா கூறினார்.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போது பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான அகாலி தளம் அதற்கு எதிராக வாக்கு அளித்தது பற்றி ஜே.பி.நட்டாவிடம் கேட்ட போது, அந்த கட்சி சார்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு பேசி தீர்வு காணப்பட்டதாக பதில்கூறினார்.

Tags :