Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெற்றிபெற விடாத முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மோடி உருவாக்குகிறார் - ராகுல் காந்தி

வெற்றிபெற விடாத முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மோடி உருவாக்குகிறார் - ராகுல் காந்தி

By: Karunakaran Mon, 21 Sept 2020 3:54:08 PM

வெற்றிபெற விடாத முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மோடி உருவாக்குகிறார் - ராகுல் காந்தி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசின் விவசாய விரோத கறுப்பு சட்டம் மூலம் வேளாண் உற்பத்தி சந்தைக்குழு அல்லது வேளாண் சந்தைகள் முடிவுக்கு வந்தால், விவசாயிகள் எவ்வாறு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுவார்கள்? குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

modi,farmers,bosses,rahul gandhi ,மோடி, விவசாயிகள், முதலாளிகள், ராகுல் காந்தி

மேலும் அவர், நாட்டை ஒருபோதும் வெற்றிபெற விடாத முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மோடி உருவாக்குகிறார் என குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், மோடி அரசு மீதான நம்பிக்கையை விவசாயிகள் இழந்து விட்டார்கள். ஏனெனில் பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி மற்றும் டீசல் மீதான அதிக வரி போன்றவை அமல்படுத்தியதில் இருந்தே மோடிஜியின் பேச்சும், செயலும் வெவ்வேறாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், விழிப்படைந்த விவசாயிகள், மோடி அரசு வேளாண் மசோதா மூலம் தனது நண்பர்களின் வியாபாரத்தை பெருக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மீது தாக்குதல் நடத்துகிறது என்பதை அறிந்துள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
|
|