Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டதாக மோடி என்னை பாராட்டினார் - டிரம்ப்

கொரோனா வைரஸ் பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டதாக மோடி என்னை பாராட்டினார் - டிரம்ப்

By: Karunakaran Tue, 15 Sept 2020 2:49:28 PM

கொரோனா வைரஸ் பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டதாக மோடி என்னை பாராட்டினார் - டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். இதனால் தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. நெவடா மாகாணத்தில் டிரம்ப்புக்கு ஆதரவு குறைவாக உள்ளதால், அங்கு அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நெவடா மாகாணம் ரெனோ நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவில் 4 கோடியே 40 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்துள்ளோம். இது இந்தியாவை விட அதிகம். பல்வேறு பெரிய நாடுகள் செய்த பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம். இந்திய பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, கொரோனா பரிசோதனையில் அமெரிக்கா சிறப்பாக பணியாற்றி இருப்பதாக என்னை பாராட்டினார் என்று தெரிவித்தார்.

modi,corona virus test,trump,america ,மோடி, கொரோனா வைரஸ் சோதனை, டிரம்ப், அமெரிக்கா

அமெரிக்காவில் இதற்கு முன்பு ஜனநாயக கட்சி ஆட்சியில் இருந்தபோது, தற்போதைய வேட்பாளர் ஜோ பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தார். அப்போது, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் அவர் தோல்வி அடைந்தார். அவர் பொறுப்பில் இருந்தபோது, சீன வைரஸ் வந்திருந்தால், இப்போது இருப்பதை விட பல்லாயிரக்கணக்கானோர் கூடுதலாக பலியாகி இருப்பார்கள் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் அவர், நாங்கள் சீனாவை எதிர்த்து நின்றதுபோல், இதற்கு முன்பு யாருமே எதிர்த்து நின்றது இல்லை. ஜோ பைடன் வென்றால், அவர் இடதுசாரி பழமைவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவார். ஜோ பைடன் வெற்றி பெற்றால், சீனா வெற்றி பெற்றதாக அர்த்தம். இடதுசாரி கும்பல் வென்றதாக அர்த்தம். அவரை தோற்கடிக்க இந்த தேர்தல்தான் ஒரே வழி. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அரசியலில் அவர்தான் மிக மோசமான வேட்பாளர் என்று கூறினார்.

Tags :
|
|