Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன ராணுவம் எப்படி இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்று மோடி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - சோனியா காந்தி

சீன ராணுவம் எப்படி இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்று மோடி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - சோனியா காந்தி

By: Karunakaran Thu, 18 June 2020 11:57:43 AM

சீன ராணுவம் எப்படி இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்று மோடி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - சோனியா காந்தி

சமீபத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவதினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்தனர். இருப்பினும் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவத்தை தாக்கியது.

லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லடாக் மோதல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

sonia gandhi,chinese army,indian region,pm modi ,சீன ராணுவம்,சோனியா காந்தி, இந்திய பகுதி,பிரதமர் மோடி

அதில், லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இந்திய மக்களிடையே கோபம் ஏற்பட்டு உள்ளது. சீன ராணுவம் எப்படி ஊடுருவி இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்பது பற்றியும், நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்துக்கும், அதன் வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும், அரசுக்கும் ஆதரவாக இருக்கும் எனவும், எதிரியின் சவால்களை சந்திக்க ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :