Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் நுழைந்த மங்கி பாக்ஸ்..கேரளாவில் ஒருவருக்கு..

இந்தியாவில் நுழைந்த மங்கி பாக்ஸ்..கேரளாவில் ஒருவருக்கு..

By: Monisha Thu, 14 July 2022 7:36:08 PM

இந்தியாவில் நுழைந்த மங்கி பாக்ஸ்..கேரளாவில் ஒருவருக்கு..

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய நபருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர், கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.

இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் என்ற நோய்ப் பாதிப்பு பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மங்கி பாக்ஸ் புதுவித நோய் இல்லை. ஆப்பிரிக்காவில் இந்த வகை நோய் காணப்படும் என்றாலும் கூட ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த வைரஸ் இந்தளவுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும்.இதற்கான காரணத்தை ஆய்வாளர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை.

இந்தியாவில் இதுவரை மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவாமலேயே இருந்தது. ஆனால், இப்போது கேரள விமான நிலையத்தில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் ஒத்த பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

monkey pox,kerala,careful,health minister , மங்கி பாக்ஸ்,கேரளா,நோய்,
சுகாதாரத்துறை,

ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது.


காய்ச்சல், தசைவலி, கொப்பளங்கள், சளி ஆகியவை இந்த மங்கி பாக்ஸின் பொதுவான அறிகுறிகளாகும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 6 சதவீதம் பேர் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள். தற்போது வரை மங்கி பாக்ஸ் பாதிப்பிற்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை. நோயாளிகள் தனிமைப்படுத்தும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கும்.

Tags :
|