Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரங்கு அம்மை ....5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

குரங்கு அம்மை ....5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

By: vaithegi Sat, 16 July 2022 11:27:25 AM

குரங்கு அம்மை ....5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

கேரளா: பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கு அம்மை என்ற நோய் பரவி வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 3,413 பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி உள்ளது

இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி ஆனது. இதன்மூலம், இந்தியாவில் குரங்கு அம்மை நுழைந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

monkey measles,kerala ,குரங்கு அம்மை,கேரளா

மேலும் கேரளாவில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, 5 மாவட்டங்களில் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருடன் ஒரே விமானத்தில் வந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

இதற்கிடையே, குரங்கு காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியது, உலக அளவில் குரங்கு அம்மை தொடர்ந்து பரவி வருவதை பார்த்தால், இந்தியாவிலும் பொது சுகாதார நடவடிக்கைளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். ஆகவே, மாநிலத்தின் நுழைவுவாயிலில், அறிகுறிகள் கொண்ட ஒவ்வொருவரையும் பரிசோதிக்க வேண்டும். அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அடிக்கடி பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். சிகிச்சை அளிக்க வேண்டிய ஆஸ்பத்திரிகளை அடையாளம் காண்பதுடன், அங்கு போதிய ஊழியர்களும், உபகரணங்களும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Tags :