Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

By: vaithegi Tue, 02 Aug 2022 5:44:43 PM

டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

டெல்லி: குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 14-ம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, கேரளாவில் 3, டெல்லி, ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து, நேற்று டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

monkey measles,delhi ,குரங்கு அம்மை ,டெல்லி

இந்த நிலையில், டெல்லியில் மீண்டும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது.

மேலும் இதன் மூலம், டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Tags :