Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரங்கு அம்மை...ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழப்பு ..உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை...ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழப்பு ..உலக சுகாதார அமைப்பு

By: vaithegi Thu, 21 July 2022 07:53:17 AM

குரங்கு அம்மை...ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழப்பு  ..உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கொண்டு வருகிறது.

மேலும் குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் மிக தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

world health organization,monkey measles ,உலக சுகாதார அமைப்பு,குரங்கு அம்மை

இதை அடுத்து தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில குரங்கு அம்மைநோய் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப் பட்டு உள்ளது.

இந்த நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 14 ஆயிரம் பேர் பாதிப்பு: என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

Tags :