பருவமழை ..சென்னையில் ஏற்பட்டு உள்ள போக்குவரத்து மாற்றம்
By: vaithegi Sat, 02 Dec 2023 10:39:56 AM
சென்னை: போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பாக மாநகர போக்குவரத்து காவல் துறை அறிக்கை வெளியீடு ... இன்று (02.12.2023) மிக்ஜாம் புயலை (வடகிழக்கு பருவமழை)முன்னிட்டு சென்னை பெருநகர காவல் வரம்பில் தற்போதைய நிலவரம்.
1. கீழ்கண்ட இடங்களை தவிர மற்ற சாலைகளில் சீராக வாகனங்கள் செல்கின்றன : இல்லை
2.முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் :
புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் -வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
3.பெருநகர சென்னை மாநகராட்சி & நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்பில் அகற்றப்படும் முக்கிய நீர் தேங்கி உள்ள பகுதிகள்: இல்லை
4. சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் (DDRTS) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:
5.மற்றவைகள்:
நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்:
1.ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கோடம்பாக்கம்
சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் அகற்றுதல்:
இல்லை
பதிவாகி உள்ள இறப்புகள்: இல்லை
நீரில் மூழ்குதல் / மின்சாரம் தாக்குதல் மற்றும்
மருத்துவ உதவிகள் விபரம்: இல்லை