Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

By: vaithegi Fri, 11 Aug 2023 09:57:37 AM

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

இந்தியா: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் 10 நாட்களுக்கு மேலாக இரு அவைகளும் முடங்கின.

இதையடுத்து மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிக்கட்சிகள் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

இத்தீர்மானம் கடந்த 08-ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தின் போது காங்கிரஸ் எம்.பிக்கள் கௌரவ் கோகோய், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கார சார விவாதத்தை முன்வைத்தனர்.

monsoon session,parties,closing ,மழைக்காலக் கூட்டத்தொடர்,எதிக்கட்சிகள்,நிறைவு

இதனை அடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் நேற்று பிரதமர் மோடி பதிலுரை வழங்கினார். அப்போது, பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மணிப்பூர் வன்முறையை விவாதிக்க மறுப்பு, எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Tags :