Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதம் ..மூடிஸ் கணிப்பு

நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதம் ..மூடிஸ் கணிப்பு

By: vaithegi Sat, 02 Sept 2023 11:16:08 AM

நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதம்   ..மூடிஸ் கணிப்பு

இந்தியா: நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி விவரங்களை தேதிய புள்ளியல் அலுவலகம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது.

அதன்படி, முதலாம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் 2023 ஆண்டின் முடிவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என மூடிஸ் தெரிவித்து உள்ளது.

moodys,india ,மூடிஸ் ,இந்தியா

இதனை அடுத்து இது பற்றி மூடிஸ் நிறுவனம் கூறுகையில், “சேவைத் துறையின் வளர்ச்சியாலும் மத்திய அரசின் மூலதன செலவினத்தின் காரணமாகவும் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவீதமாகவுள்ளது.

இந்த நிலையில், ஒட்டுமொத்த அளவில் 2023-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும்’’ என தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :
|