Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள்; அதிபர் டிரம்ப் பாராட்டு

இந்தியாவில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள்; அதிபர் டிரம்ப் பாராட்டு

By: Nagaraj Tue, 11 Aug 2020 6:57:39 PM

இந்தியாவில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள்; அதிபர் டிரம்ப் பாராட்டு

கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடி இந்தியா, இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதிபர் டிரம்ப் பாராட்டி உள்ளார்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை 205க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இங்கு கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது:

corona,india,experiments,president trump ,கொரோனா, இந்தியா, பரிசோதனைகள், அதிபர் டிரம்ப்

உயர்தரமான பரிசோதனைகள் செய்வதிலும், பரிசோதனைகளின் எண்ணிக்கையிலும் உலகில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா இதுவரை 6.5 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கையை எந்த நாடும் நெருங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, 1.1 கோடி பரிசோதனைகளை செய்து இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும்.

அதைத் தொடர்ந்து மிகவிரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தாம் உறுதியாக நம்புவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|