Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் அதிக பேர் பாதிப்பு

கோவை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் அதிக பேர் பாதிப்பு

By: vaithegi Fri, 23 Sept 2022 4:28:00 PM

கோவை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் அதிக பேர் பாதிப்பு

கோவை ; கடந்த வாரம் முதல் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் உள்ளிட்ட பல காய்ச்சல்கள் பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இதுவரை மட்டும் தமிழகத்தில் காய்ச்சலால், 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் அதிக பேர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

coimbatore,mysterious fever ,கோவை ,மர்ம காய்ச்சல்

அதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும், அது பற்றி சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை அடுத்து அதில், ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. இந்த காய்ச்சல் ஏ பி சி என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் சி வகையில் இருப்பவர்களுக்கு தான் மருத்துவர்களின் சிகிச்சை தேவைப்படுகிறது.மேலும் சி வகையில் இருப்பவர்கள் தான் மருத்துவமனைகளில் அனுமதிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags :