Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டாரங்கலிருந்து 100க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது

நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டாரங்கலிருந்து 100க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது

By: vaithegi Sat, 03 Sept 2022 4:38:04 PM

நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டாரங்கலிருந்து 100க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடந்த 31-ந்தேதி விநாயகர் சதூர்த்தியன்று 4 இடங்களில் மிக பெரிய விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதை அடுத்து வழிபாடு முடிந்து 3-ம் நாளான நேற்று மாலை அந்த சிலைகளுடன், பொதுமக்கள் வீடுகளில் வழிபட்ட 200-க்கும் மேற்பட்ட சிறிய களிமண் சிலைகளையும் நகர வீதியில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

அதன் பின்னர் மீனவர் பகுதி மற்றும் வடக்கு மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

mamallapuram,ganesha idols ,மாமல்லபுரம் ,விநாயகர் சிலைகள்

இதனை தொடர்ந்து 5-ம் நாளான நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

இதற்காக செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின் பெயரில் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அதற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :