Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரெடி சூறாவளி தாக்கியதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்

பிரெடி சூறாவளி தாக்கியதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்

By: Nagaraj Wed, 15 Mar 2023 11:56:44 PM

பிரெடி சூறாவளி தாக்கியதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்

ஆஸ்திரேலியா: சூறாவளி தாக்குதல்... மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மலாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரெடி சூறாவளி தாக்கியதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆஸ்திரேலியாவில் பிரெடி புயல் உருவானது. ஒரு வெப்பமண்டல புயல், பிப்ரவரி 21 அன்று மடகாஸ்கர் வழியாக இந்தியப் பெருங்கடலில் நகர்ந்து பிப்ரவரி 24 அன்று மொசாம்பிக்கில் கரையைக் கடந்தது.

australia,brady,storm, ,ஆஸ்திரேலியா, கடும் புயல், பேரிடர் மேலாண்மை அதிகாரி

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மொசாம்பிக்கை புயல் தாக்கியது. இதில் அண்டை நாடான மலாவியும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அதிகாரி கூறியதாவது: பிரெடி கரையை கடந்த போது, பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு, ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டு, அதில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள், பெரியவர்கள், 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சுமார் 134 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிலரை காணவில்லை,” என்றார்.

Tags :
|
|