Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அக்டோபரில் 1000ற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு

தமிழகத்தில் அக்டோபரில் 1000ற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு

By: vaithegi Tue, 24 Oct 2023 09:48:13 AM

தமிழகத்தில் அக்டோபரில் 1000ற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு


சென்னை: அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே மற்றும் ப்ளூ காய்ச்சல் காரணமாக பாதிப்பு என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் அக்டோபர் மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் இம்மாதம் மட்டும் 16 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தாண்டு இதுவரை 5 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 உயிரிழந்துள்ளனர்.

dengue,infection,blue fever ,டெங்கு ,பாதிப்பு , ப்ளூ காய்ச்சல்

மேலும் நகரங்களில் வீடு வீடாகவும், கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு வருவோரின் விவரங்களையும் சுகாதாரத்துறை சேகரித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலால் ஒரே மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Tags :
|