Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதி அரேபியாவில் 1.86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பாதிப்பு

சவுதி அரேபியாவில் 1.86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பாதிப்பு

By: Karunakaran Tue, 30 June 2020 11:14:56 AM

சவுதி அரேபியாவில் 1.86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பாதிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.86 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு மிகக்குறைவாகவே இருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

corona virus,saudi arabia,corona prevalence,corona death ,கொரோனா வைரஸ், சவுதி அரேபியா, கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு தற்போது கொரோனா பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 48 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 1,599 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில்,ரஷ்யா நாடுகள் உள்ளன. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. கொரோனா உயிரிழப்பு பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :