Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

அமெரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

By: vaithegi Fri, 23 Dec 2022 09:00:13 AM

அமெரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

அமெரிக்கா: கடும் பனிப்பொழிவு விமானங்கள் ரத்து .... அமெரிக்காவின் பலபகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்களை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

airplanes,usa ,விமானங்கள் ,அமெரிக்கா

இதனை அடுத்து இன்று 1000 விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன. பனிப்பொழிவால் விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பயணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், பேருந்தின் மூலம் மட்டுமே நீண்ட நேரம் பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags :