Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்த புனித நாளை ஒட்டி 2 ஆயிரத்திற்கும் அதிகமான அரசியல் கைதிகள் விடுதலை

புத்த புனித நாளை ஒட்டி 2 ஆயிரத்திற்கும் அதிகமான அரசியல் கைதிகள் விடுதலை

By: Nagaraj Thu, 04 May 2023 12:30:25 PM

புத்த புனித நாளை ஒட்டி 2 ஆயிரத்திற்கும் அதிகமான அரசியல் கைதிகள் விடுதலை

மியான்மர்: அரசியல் கைதிகள் விடுதலை... மியான்மரில் புத்த புனித நாளையொட்டி 2153 அரசியல் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைவர் மன்னிப்பு வழங்கி அவர்களின் விடுதலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மியான்மரில் ஆங் சாங் சூயில் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதில் இருந்து அங்கு, போராட்டம், வன்முறை அதிகரித்து வருகிறது.

imprisonment,release,myanmar,aung khun suu kyi,political prisoners ,சிறை தண்டனை, விடுதலை, மியான்மர், ஆங்காங் சூகி, அரசியல் கைதிகள்

ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளதால் தினமும் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆங் சாங் சூயி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புத்த புனித நாளையொட்டி 2153 அரசியல் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைவர் மன்னிப்பு வழங்கி அவர்களின் விடுதலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் சட்டத்தை மீறினால் அவர்களுக்கு புதிய தண்டனை வழங்கப்படும் எனவும், 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூகி இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகிறது.

Tags :