ஒரே வாரத்தில் 22 லட்சத்திற்கும் அதிகமான பப்ஜி கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்
By: Nagaraj Wed, 02 Sept 2020 10:38:28 AM
ஒரே வாரத்தில் 22 லட்சத்திற்கும் அதிகமான பப்ஜி கணக்குகள் நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் கேம் ஆன பப்ஜியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரே வாரத்தில் 22 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை, அந்நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது.
இ-ஸ்போர்ட்ஸ் தரப்பில் அண்மையில் நடைபெற்ற பல நாட்டு வீரர்கள் பங்கேற்கும்
பப்ஜி தொடரில், முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. விசாரணையின்
முடிவில், கடந்த ஆகஸ்ட் 20 முதல் ஒரே வாரத்தில் 14 லட்சம் சாதனங்களில்
இருந்து, 22 லட்சத்து 73 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வேகம்,
தானியங்கி முறையில் குறி வைப்பது மற்றும் எக்ஸ்-ரே விஷன் மூலம் எதிரிகளை
இலகுவாக அடையாளம் காண்பது போன்ற திறன்களை முறைகேடாக அதிகரித்ததன் காரணமாக
இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.