Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Thu, 21 May 2020 10:13:16 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏறத்தாழ 55 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் அதிக பாதிப்புள்ள மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மத்தியிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

india,coronavirus,maharashtra,department of health,curfew ,இந்தியா,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா,சுகாதாரத் துறை,ஊரடங்கு

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மேலும் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாது கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1390 ஆக உயர்ந்துள்ளது என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
|