Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸில் கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

பிரான்ஸில் கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

By: Karunakaran Sun, 11 Oct 2020 4:20:39 PM

பிரான்ஸில் கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் 10-வது இடத்தில் உள்ளது.

corona attack,france,corona virus,corona prevalence ,கொரோனா தாக்குதல், பிரான்ஸ், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

தற்போது, பிரான்சில் 26 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதையடுத்து அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 18 ஆயிரத்து 873 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அந்நாட்டில் 54 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 637 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா காரணமாக 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா காரணமாக 2 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tags :
|