Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம்

By: Karunakaran Sun, 21 June 2020 2:10:46 PM

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர். இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

மஹாராஷ்டிராவிற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 396 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

coronavirus,tamilnadu,corona cured,maharastra ,கொரோனா வைரஸ்,தமிழகம்,கொரோனா பாதிப்பு,மஹாராஷ்டிரா

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 24 ஆயிரத்து 822 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 31 ஆயிரத்து 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகத்திற்கு அடுத்த இடத்தில் உள்ள டெல்லி மற்றும் குஜராத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தை விட அதிகமாகும்.

Tags :