Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதிப்பு அதிகம் வர வாய்ப்புள்ள 3.47 லட்சம் பேர் கண்காணிக்கப்படுகின்றனர்

கொரோனா பாதிப்பு அதிகம் வர வாய்ப்புள்ள 3.47 லட்சம் பேர் கண்காணிக்கப்படுகின்றனர்

By: Nagaraj Mon, 08 June 2020 7:43:33 PM

கொரோனா பாதிப்பு அதிகம் வர வாய்ப்புள்ள 3.47 லட்சம் பேர் கண்காணிக்கப்படுகின்றனர்

3.47 லட்சம் பேர் கண்காணிப்பு... சென்னையில் கொரோனாவினால் பாதிப்பு அதிகம் வர வாய்ப்புள்ளவர்கள் என கணக்கிடப்பட்ட 3.47 லட்சம் பேரை கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில், கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட உள்ளதாக 3,47,380 பேர் கணக்கிடப்பட்டுள்ளனர். அவர்களை, சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்னை நகரில், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.

health care,supervision,prevention,monitoring,madras ,சுகாதாரப்பணி, மேற்பார்வை, தடுப்பு பணி, கண்காணிப்பு, சென்னை

சென்னையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி, கபசுர குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 1.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 100 காய்ச்சல் சிறப்பு முகாம்களை 200 ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொற்று பாதித்த நபர்கள், நுண் கண்காணிப்பு முறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

health care,supervision,prevention,monitoring,madras ,சுகாதாரப்பணி, மேற்பார்வை, தடுப்பு பணி, கண்காணிப்பு, சென்னை

2 லட்சம் நபர்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் என்ற ஹோமியோபதி மருந்து கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நோய் தடுப்பு பணியில் சுகாதார பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.

பூச்சிதடுப்பு துறை பணியாளர், சுகாதார பணியாளர்கள் மேற்பார்வை ஆர்வலர் என 38,198 பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :