Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 6 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 6 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

By: Karunakaran Mon, 03 Aug 2020 11:47:29 AM

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 6 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus,world,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், உலகம், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனா காரணமாக இதுவரை 6 லட்சத்து 92 ஆயிரத்து 348 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ள பிரேசிலில் 94,130 உயிரிழப்புகளும், மெக்சிகோவில் 47,472 உயிரிழப்புகளும், இங்கிலாந்தில் 46,201 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.




Tags :
|