Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி .. 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபாடு

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி .. 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபாடு

By: vaithegi Mon, 18 Sept 2023 11:51:30 AM

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி  .. 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபாடு

சென்னை; நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முழு முதல் கடவுளான விநாயகனை அவரது பிறந்த நாளான இன்று விநாயகர் சதுர்த்தி என்று மக்கள் கொண்டாடி கொண்டு வருகின்றனர். அறிவு ,ஞானம், கல்வி ஆகியவற்றை கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் எடுத்தாலும், விநாயகரை வணங்கி தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை ஆங்காங்கே வைத்து 3 நாட்கள் கழித்து ஊர்வலமாக கொண்டு சென்று நதிகளில் கரைப்பது வழக்கமான ஒன்று .

police,vinayagar chaturthi ,போலீஸார் ,விநாயகர் சதுர்த்தி

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் 74,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாகவும்,

மேலும் முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக டிரோன்கள் மற்றும் மொபைல் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Tags :
|