Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் அப்டேட்: உலகம் முழுவதும் 76 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிப்பு

கொரோனா வைரஸ் அப்டேட்: உலகம் முழுவதும் 76 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிப்பு

By: Monisha Fri, 12 June 2020 6:03:07 PM

கொரோனா வைரஸ் அப்டேட்: உலகம் முழுவதும் 76 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிப்பு

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது கடும் சவாலாக உள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 76 லட்சத்து 15 ஆயிரத்து 953 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 76,15,953 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

coronavirus virus,update,china,usa,brazil ,கொரோனா வைரஸ்,அப்டேட்,சீனா,அமெரிக்கா,பிரேசில்

நோய்த்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 20,89,825 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 1,16,035 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 8,05,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,058 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா சிகிட்சைக்காக விஞ்ஞானிகள் சிலரின் ஆலோசனையின் பேரில் காசநோய் மற்றும் போலியோவைத் தடுக்கும் மருந்துகள் பலனளிக்குமா என்று புதிய ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Tags :
|
|
|