Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு

தெலுங்கானாவில் ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு

By: Nagaraj Sun, 31 May 2020 9:42:17 PM

தெலுங்கானாவில் ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு

தெலுங்கானாவில் ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அம்மாநில முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை 5வது கட்டமாக ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

telangana,june 30,curfew,extension,cm ,தெலுங்கானா, ஜுன் 30, ஊரடங்கு, நீட்டிப்பு, முதல்வர்

இதனை தொடர்ந்து, ம.பி., பஞ்சாப் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ம.பி.,யில் ஜூன் 15ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30ம் தேதி வரையும், மேற்கு வங்கத்தில் ஜூன் 15ம் தேதி வரையும், தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரையும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி ஊரடங்கை நீட்டிப்பதாக அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானாவும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர பிற பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெலுங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags :
|