Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீட்டில் உள்ளவர்களாலேயே அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது

வீட்டில் உள்ளவர்களாலேயே அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது

By: Nagaraj Tue, 21 July 2020 9:09:56 PM

வீட்டில் உள்ளவர்களாலேயே அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது

வீட்டுக்கு வெளியே ஏற்படும் பாதிப்புகளை விட வீட்டில் உள்ளவர்களாலேயே அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்று வெளியான ஆய்வின் தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள ஆய்வு முடிவொன்றில், வீட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை விட, வீட்டின் சொந்த உறுப்பினர்களால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது என தென்கொரியா நாட்டை சேர்ந்த ஆய்வாளர்களின் ஆராய்ச்சி முடிவில் கண்டறியப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

அந்த ஆய்வில், 100 பேரில் 2 பேருக்கு வீட்டு உறுப்பினர்கள் அல்லாதவர்களிடம் இருந்து தொற்று ஏற்பட்டு உள்ளது. அதேவேளையில், 10ல் ஒருவருக்கு தொற்றானது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

study,trauma,children,infections,people at home ,ஆய்வு, அதிர்ச்சி, குழந்தைகள், தொற்று, வீட்டில் உள்ளவர்கள்

வயது அடிப்படையில் எடுத்து கொண்டால், டீன் ஏஜ் பருவத்தினர் அல்லது 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட வீட்டில் உள்ளவர்களிடம் தொற்று விகிதம் அதிகளவில் காணப்படுகிறது. ஏனெனில், இந்த வயதினர், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அல்லது ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது.

9 மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய குழந்தைகளுக்கு, குடும்பத்தினரால் குறைவாகவே தொற்று ஏற்படுகிறது. இதேபோன்று, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதற்கான அறிகுறிகள் தென்படாதவர்களாக முதியவர்களை விட குழந்தைகள் அதிகளவில் இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

Tags :
|
|