Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு உத்தரவு ஜூன் 30க்கு பின்னரும் நீடிக்கப்பட அதிக வாய்ப்பு

ஊரடங்கு உத்தரவு ஜூன் 30க்கு பின்னரும் நீடிக்கப்பட அதிக வாய்ப்பு

By: Monisha Sat, 27 June 2020 11:42:11 AM

ஊரடங்கு உத்தரவு ஜூன் 30க்கு பின்னரும் நீடிக்கப்பட அதிக வாய்ப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் அடுத்தடுத்து ஐந்து கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30க்கு பின்னரும் நீடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆகவும், பலி எண்ணிக்கை 957 ஆகவும் அதிகரித்துள்ளது.

india,corona virus,curfew,tamil nadu,cm edappadi palanisamy ,இந்தியா,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,தமிழ்நாடு,முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது திங்கட்கிழமைக்கு பிறகே தெரியும் என்று கூறினார்

ஊரடங்கு விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், மருத்துவ நிபுணர்களுடன் ஜூன் 29 ஆம் தேதி அன்று ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்குப் பின்னரே ஊரடங்கு உத்தரவு நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே மேற்குவங்க முதல்வர் ஜூலை 31வரை ஊரடங்கை நீட்டித்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|