Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்ய தாக்குதலால் கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதம்

ரஷ்ய தாக்குதலால் கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதம்

By: Nagaraj Fri, 27 Jan 2023 11:04:03 AM

ரஷ்ய தாக்குதலால் கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதம்

கீவ்: ரஷ்ய தாக்குதலால் கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 11 மாதங்களாக போர் நடந்து வருகிறது. சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளுடன் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. நடந்து வரும் போரில் இரு தரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள, உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்க மேற்கு நாடுகள் முடிவு செய்துள்ளன. ஜெர்மனியும் அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஒப்புக்கொண்டது இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

attack,casualties,missile,russia,ukraine, ,உக்ரைன், உயிரிழப்பு, ஏவுகணை, தாக்குதல், ரஷியா

நவீன டாங்கிகளை வழங்கும் மேற்குலகின் முடிவு அவர்கள் நேரடியாக போரில் பங்கேற்பதாக அர்த்தம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவும், ஜெர்மனியும் நவீன டாங்கிகளை வழங்குவதாக அறிவித்த 24 மணி நேரத்தில், ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 11 பேர் காயமடைந்தனர். கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியதாவது:- நீங்கள் அனைவரும் பார்த்தது போல், ரஷ்யா நேற்று இரவு உக்ரைன் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதோடு, காயமடைந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அமெரிக்கா சார்பில் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags :
|
|