Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோ பைடன் மீது பெரும்பாலான வலது சாரி வலைதளங்கள் தேர்தல் மோசடி புகார்

ஜோ பைடன் மீது பெரும்பாலான வலது சாரி வலைதளங்கள் தேர்தல் மோசடி புகார்

By: Karunakaran Fri, 13 Nov 2020 08:03:47 AM

ஜோ பைடன் மீது பெரும்பாலான வலது சாரி வலைதளங்கள் தேர்தல் மோசடி புகார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்றுவிட்டார். ஜனவரி 20-க்கு மேல் ஜோ பைடன் பதவி ஏற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் அதேநேரத்தில் டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் அவர், தேர்தலில் மிகப்பெரிய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது என்று கூறி நீதிமன்றத்தையும் நாடியிருக்கிறார்.

ஆனால் ஜோ பைடனோ, ட்ரம்ப் இப்படி நடந்துகொள்வது எனக்கு சங்கடத்தை தருகிறது. மிகவும் வெளிப்படையாக, இது ஜனாதிபதியின் மரபுக்கு உதவாது என்று நான் நினைக்கிறேன். ஜனவரி 20-ம் தேதிக்குள், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பது ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

right-wing websites,complain,election fraud,joe biden ,வலதுசாரி வலைத்தளங்கள், புகார், தேர்தல் மோசடி, ஜோ பிடன்

இந்நிலையில், ட்ரம்ப்பின் புகாரை அடுத்து, சில இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. ட்ரம்ப் தரப்பு கோரிக்கையைத் தொடர்ந்து, ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதிபர் ஆவதற்கு 270 தேர்வாளர்கள் வாக்குகள் தேவை என்ற நிலையில், பைடன் 290 வாக்குகளை ஏற்கனவே பெற்றுவிட்டதால், ஜார்ஜியா மறுவாக்கு எண்ணிக்கை முடிவு அவரது வெற்றியை பாதிக்காது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஜோ பைடன் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின்னஞசல் மூலம் இறந்தவர்கள் வாக்குகள் செலுத்தப்பட்டு மோசடி நடந்துள்ளதாக கூறிய பிரபல பாக்ஸ் நியூஸ் செய்தியாளர் டக்கர் கார்ல்சன், அமெரிக்க வாக்கு செலுத்தும் முறையை ஜனநாயக கட்சி, இந்தத் தேர்தலில் மாற்றிவிட்டது. அமெரிக்க தேர்தல் அமைப்பு இதுவரை ஒழுங்கற்றதாக இருந்ததில்லை. மேலும், ஒருபோதும் சூழ்ச்சியால் பாதிக்கப்பட கூடாது என்று கூறினார்.

Tags :