Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய் என்றாலே பாசம் ,தனி அக்கறை தான் அது மனிதர்கள் என்றால் என்ன விலங்கு என்றால் என்ன..

தாய் என்றாலே பாசம் ,தனி அக்கறை தான் அது மனிதர்கள் என்றால் என்ன விலங்கு என்றால் என்ன..

By: Monisha Thu, 30 June 2022 9:43:02 PM

தாய் என்றாலே பாசம் ,தனி அக்கறை தான் அது மனிதர்கள் என்றால் என்ன  விலங்கு என்றால் என்ன..

தமிழ்நாடு: நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் உள்ள குடி இருப்பு பகுதியில் இரு குட்டிகளை சுமந்து சென்ற தாய் கரடி. அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில பெண்கள் தேயிலையை பறித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இரு குட்டிகளை தனது முதுகில் சுமந்தவாறு தாய் கரடி ஒன்று அந்த சாலையில் நடந்து வந்தது.

சிறிது தூரம் சாலையில் நடந்து வந்த கரடி அங்குமிங்கும் பார்த்தது. அப்போது தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்வதை கண்ட தாய் கரடி தனது குடிகளுடன் பாதுகாப்பான தேயிலை தோட்டம் வழியாக சென்றது.

bear,kids,road,workers , கரடி , குட்டி, சாலை,தொழிலாளர்,

தற்போது நாவல் பழம் சீசன் துவங்க இருப்பதால் கரடிகள் நாவல் பழத்தை தேடி கிராம பகுதிக்குள் நடமாடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அவ்வாறு வரும் கரடிகளை யாரும் அச்சுறுத்த வேண்டாம் என்று கேட்டு கொண்டனர்.

Tags :
|
|
|