Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

By: Nagaraj Thu, 10 Sept 2020 7:57:22 PM

நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

வடிவேல் பாலாஜி திடீர் மரணம்... திறமையான நகைச்சுவை நடிகராகத் ரசிகர்களிடம் புகழ் பெற்றிருந்த வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அத ன்மூலம் புகழ்பெற்றவர் வடிவேல் பாலாஜி (42). நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்ததால் அதிகக் கவனம் பெற்றார். சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவாக இருந்தது குறித்து எந்தத் தகவலும் வெளிவராத நிலையில் திடீரென அவர் மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

vadivelu balaji,demise,mourning,fans,pain ,வடிவேல் பாலாஜி, மறைவு, இரங்கல், ரசிகர்கள், வேதனை

இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்தபோது வடிவேல் பாலாஜிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் பிரச்னை ஏற்பட்டதால் உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்கிற சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே உடல்நலக்குறைவுடன் இருந்ததாக நடிகர் ராமர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வடிவேல் பாலாஜியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Tags :
|
|