Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோபா குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரன நியமனம்

கோபா குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரன நியமனம்

By: Nagaraj Thu, 24 Sept 2020 10:39:52 AM

கோபா குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரன நியமனம்

கோபா குழு தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்... அரசாங்க கணக்குகள் குழு எனப்படும் கோபா குழுவின் தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் 9 ஆவது நாடாளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழுவின் தலைவராக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார்.

பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு (கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் (கோபா) குழுக்களுக்கு 22 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

copa committee,appointment,oversight,management ,கோபா குழு, நியமனம், கண்காணிக்கும், நிர்வாகத்திறன்

அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழியங்கும் ஏனைய நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் கோப் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அரசாங்கம், அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாகத்திறன் மற்றும் நிதி ஒழுங்கமைப்பு ஆகியவற்றை கண்காணிக்கும் அதிகாரம் கோபா குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :