Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் .. மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் .. மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

By: vaithegi Sun, 16 July 2023 12:13:49 PM

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல்  ..  மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்


சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு ... நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெற்றது. நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26 ஆயிரத்து 805 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 394 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்துவுள்ளனர். கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்ததாகவும், இந்தாண்டு 4 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை சென்னை கிண்டியில் இன்று காலை 10 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில், 2023ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை அரசு ஒதுக்கீடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு என 3 வகையான தரவரிசை பட்டியல் மற்றும் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.

m. subramanian,junior medical course ,மா.சுப்பிரமணியன் ,இளநிலை மருத்துவப் படிப்பு

மேலும் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பங்கள் 2,662 பெறப்பட்டதாகவும், விளையாட்டுப் பிரிவில் 179 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், முன்னாள் ராணுவ படை வீரர்களின் பிரிவில் 401 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 98 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இப்படி பெறப்பட்ட அத்தனை விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் மற்றும் ஏழரை சதவிகித அரசு பள்ளி மாணவர்களின் ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் 6,326 ஆகும். அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 1,768 ஆகும். 7.5% ஒதுக்கீட்டிற்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் 473 ஆகும். 7.5% ஒதுக்கீட்டிற்கான பல் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 133 ஆகும். ஆக இந்தாண்டு 7.5% அடிப்படையில் உள் ஒதுக்கீட்டின்படி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 606 என அவர் தெரிவித்தார்.

Tags :