Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் 5 பில்லியன் டாலர்கள் குறைந்தது

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் 5 பில்லியன் டாலர்கள் குறைந்தது

By: Nagaraj Tue, 03 Nov 2020 09:05:20 AM

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் 5 பில்லியன் டாலர்கள் குறைந்தது

சொத்து மதிப்பு குறைந்தது... உலக பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றிருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு திடீரென 5 பில்லியன் டாலர்கள் அளவிற்கு குறைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில மாதங்களாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 10 இடத்திற்குள் ஒருவராக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. இவர் ஒவ்வொரு இடமாக முன்னேறி விரைவில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பிடிப்பார் என்று கருதப்பட்டது.

stock market,fall,mukesh ambani,loss,reliance,property ,பங்குசந்தை, வீழ்ச்சி, முகேஷ் அம்பானி, இழப்பு, ரிலையன்ஸ், சொத்து

இந்த நிலையில் திடீரென முகேஷ் அம்பானியின் சொத்துக்களில் 5 மில்லியன் டாலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் திடீரென 7 சதவீதம் சரிந்ததை அடுத்தே இந்த இழப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் குறைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Tags :
|
|