உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் முகேஷ் அம்பானி
By: Nagaraj Mon, 22 June 2020 5:36:48 PM
உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக இருந்த அவரது சொத்து மதிப்பு சுமார் 4 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக அதிகரித்தை அடுத்து, ஆரக்கிள் கார்ப்பரேஷன் தலைவர் லாரி எல்லிசன்,(Larry Ellison) பிரான்சின் பிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, ஒன்பதாவது இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
கொரானா பாதிப்பால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்த போதிலும்,ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிட்டடில், ஃபேஸ் புக், ஜெனரல் அட்லான்டிக், சவூதி, யுஏஇ நிறுவனங்கள் உள்ளிட்டவை பெருமளவில் முதலீடு செய்தன. இதனால் ரிலையன்சின் பங்கு மூலதனம் அதிகரித்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.