Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

By: Monisha Tue, 23 June 2020 10:19:31 AM

உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி இணைந்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் அவர் சமீபத்தில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் முகேஷ் அம்பானியின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இறங்கியதால் பெரும் சரிவு ஏற்பட்டது.

world rich,9th place,mukesh ambani,reliance industries ,உலக பணக்காரர்கள்,9வது இடம்,முகேஷ் அம்பானி,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ்

இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17% பங்குகளை ஃபேஸ்புக் உள்பட ஒருசில நிறுவனங்களுக்கு விற்றார். இதன் மூலம் அவருக்கு ரூ.1,15,693.95 கோடிகள் கிடைத்தன. இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. அதேநேரத்தில் பங்கு சந்தையும் மீண்டெழுந்து அவரது நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயர்ந்தன.

இதன் காரணமாக தற்போது முகேஷ் அம்பானி சொத்த மதிப்பு ரூ.4.9 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதனையடுத்து முகேஷ் அம்பானி தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Tags :