Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகம் ... முகேஷ் அம்பானி

தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகம் ... முகேஷ் அம்பானி

By: vaithegi Mon, 29 Aug 2022 4:20:38 PM

தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகம்    ...   முகேஷ் அம்பானி

இந்தியா: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதை அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, வருடாந்திர கூட்டத்தில் பேசுகையில் , நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம்மிக முக்கிய பங்காற்றி கொண்டு வருகிறது எனவும், ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து மேலும், தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

மேலும் அவர் பேசும் போது ஜியோ 5ஜி உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன 5ஜி நெட்வொர்காக இருக்கும்.கடந்த ஆண்டு 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

mukesh ambani,chennai,mumbai,kolkata,delhi , முகேஷ் அம்பானி ,சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி

இதைத்தொடர்ந்து இந்தியா முழுமைக்குமான ஒரு 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க ஜியோ 2000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.மேலும் மத்திய அரசின் திறமையான மேலாண்மை மற்றும் நடைமுறைக்கேற்ற செயல்பாடு

இந்தியாவை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது.ரிலையன்ஸ் நிறுவனம் 1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது என கூறினார்.

Tags :
|