Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா, ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

இந்தியா, ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

By: Nagaraj Sat, 11 July 2020 9:35:20 PM

இந்தியா, ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

மீண்டும் முதலிடம் பிடித்தார்... இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்த முகேஷ் அம்பானி, மீண்டும் முதலிடத்தை பிடித்தார். உலக அளவில் 8வது இடம் பிடித்தார்.

இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி, சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் அவர் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த நேரத்தில் தனது டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17 சதவீத பங்குகளை விற்றார். இதனை பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுயிடி பங்குதாரர்கள், கேகேஆர் உள்ளிட்ட உலக முன்னணி நிறுவனங்கள் ரூ.1,15,693.95 கோடிக்கு வாங்கின. இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது.

again,number one,mukesh ambani,world class ,மீண்டும், முதலிடம், முகேஷ் அம்பானி, உலக அளவு

பங்கு சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சத்தை தொட்டன. இதன் காரணமாக அம்பானியின் சொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 68.3 பில்லியன் டாலர் ஆனது. இது இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும். இதனால், இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

மேலும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்தார்.வெறும் 58 நாட்களில் கடன் இல்லாத நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாறியது. உலகின் தலை சிறந்த முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார் முகேஷ் அம்பானி.

புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரகள் பட்டியலின்படி, அம்பானி 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்திலும், 67.8 பில்லியன் டாலருடன் வாரன் பபெட் 9வது இடத்திலும் உள்ளனர். வாரன் பபெட், கடந்த மாதம் 2.9 பில்லியன் டாலரை அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளதால் அவர் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அம்பானி, தற்போது ஆசிய பணக்காரர்களில் முதலிடத்திலும், உலகளவில் 8வது இடத்திலும் உள்ளார்.

Tags :
|