Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முகேஷ் அம்பானி இளைய மகன் நிச்சயதார்த்தம்... ஆடல், பாடலுடன் விமரிசையாக நடந்தது

முகேஷ் அம்பானி இளைய மகன் நிச்சயதார்த்தம்... ஆடல், பாடலுடன் விமரிசையாக நடந்தது

By: Nagaraj Sat, 21 Jan 2023 10:28:26 PM

முகேஷ் அம்பானி இளைய மகன் நிச்சயதார்த்தம்... ஆடல், பாடலுடன் விமரிசையாக நடந்தது

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபராகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமாக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்தம் ஆடல் பாடலுடன் விமர்சையாக நடந்தது.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

anand ambani,engagement ,ஆனந்த் அம்பானி, நிச்சயதார்த்தம். ஆட்டம், பாட்டம், மேடை, நடனம்

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலாவில் பாரம்பரிய முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது.இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குஜராத் மாநிலத்திற்கே உரித்தான பாரம்பரிய சடங்குகளுடன் சிறப்பான முறையில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்பானி குடும்பத்தினர் ஒன்றாக மேடையில் நடனம் ஆடியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

Tags :